தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கு கிடைத்த புவிசார் குறியீடு – வானதி பெருமிதம்

0
98
வானதி சீனுவாசன்

தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கு கிடைத்த புவிசார் குறியீடிற்கு வானதி சீனிவாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”பழமையும் பெருமையும் நிறைந்த நம் தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. மதுரை மல்லி, திருநெல்வேலி ஆல்வா, திண்டுக்கல் பூட்டு! இதே போல  ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி  அடையாளம் உண்டு! அந்த அடையாளங்களுக்கு பெருமையும், அங்கீகாரமும் சேர்க்கும் வகையில் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி கௌரவிக்கிறது.

அந்த வகையில் நம் தமிழ்நாட்டின் பாரம்பரியமான ஜடேரி நாமக்கட்டி, செடி புட்டா சேலை,  கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவை இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம்  ஜடேரி கிராமத்து மக்களால் சுமார் 300 ஆண்டுகளாக தயாரிக்கப்படும் ஜடேரி நாமக்கட்டி  பல்வேறு மருத்துவ குண நலன்கள் நிறைந்தது. சுமார் 150 குடும்பங்களின் அயராத உழைப்பினால் உருவாகும் இந்த நாமங்கட்டி இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் புவிசார் குறியீடை பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கைத்தறி நெசவாளர்களால் நெசவு செய்யப்படும் பாரம்பரிய செடி புட்டா சேலையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மருத்துவ பயன்கள் நிறைந்த கன்னியாகுமரி மட்டி வாழைப்பழமும்  மத்திய அரசின் புவிசார் குறியீடை பெற்றுள்ளது.

இதுவரை தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட 58 பொருட்கள் புவிசார் குறியீடுகளை பெற்றுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே அதிகமான மத்திய அரசின் புவிசார் குறியீடுகளை பெற்ற மாநிலமாக நம் தமிழ்நாடு திகழ்கிறது! இது நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த சிறப்பும், பெருமையும்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here