திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள அரிச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவல் இர்பான் வயது 20.இவர் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் கஞ்சா வைத்து விற்பனை செய்தபோது அவரிடம் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பழனிப்பேட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி கஞ்சா கேட்டுள்ளார்.அப்போது இர்பான் அதிக விலை கூறியதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிகொண்டனர்.
இதை கண்ட மூர்த்தியின் நண்பர்கள் 4 பேர் இர்பானை ரயில் நிலையத்தில் ஓட ஓட விரட்டி மறைத்து வைத்திருந்த கத்தியால் இர்பானை தலையில் வெட்டியுள்ளனர்.அவரை காப்பாற்ற சென்ற இர்பானின் நண்பர் தோசிப்பிற்கும் வெட்டு விழுந்துள்ளது.

தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் கத்தியால் வெட்டிய மூர்த்தியை மட்டும் பிடித்தனர்.அவரது நண்பர்கள் 4 பேரும் தப்பியோடினர்.படுகாயம் அடைந்த இர்பான், தோசிப் ஆகிய இருவரையும் மீட்ட ரயில்வே காவல்துறை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மூர்த்தியின் நண்பர்கள் 4 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.