டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமான இந்திய பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி உடல் நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று மாலை காலமானார் அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்பட்டது அவர் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து இன்று அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தஞ்சை தலைமை அஞ்சலகம் அருகில் இருந்து சிபிஐஎம் மற்றும் அனைத்து கட்சியினர் அனைத்து அமைப்பினர் பேரணியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்றனர்.
யெச்சூரி ஐதராபாத்தில் வளர்ந்தார். மேலும் தனது பத்தாம் வகுப்பு வரை ஐதராபாத்தில் உள்ள அனைத்துப் புனிதர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1969ஆம் ஆண்டு தெலுங்கானா போராட்டம் காரணமாக இவர் தில்லிக்குக் குடிபெயர்ந்தார். புது தில்லியில் உள்ள பிரசிடெண்ட்ஸ் எஸ்டேட் பள்ளியில் சேர்ந்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரிய உயர்நிலைத் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் தரத்துடன் தேர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, இளங்கலை பொருளியல் படிப்பினை தில்லியில் உள்ள தூய ஸ்டீபன் கல்லூரியிலும் முதுநிலைப் பொருளாதாரப் படிப்பினை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் முடித்து முதல் வகுப்பில் தேர்ந்ச்சிப்பெற்றார். முனைவர் பட்டப்படிப்பிற்காக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் யெச்சூரி. ஆனால் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இவர் கைது செய்யப்பட்டதால் தொடர இயலவில்லை.
1974ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தி்ல் உறுப்பினராகச் சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் (மார்க்சிஸ்ட்) இணைந்தார். யெச்சூரி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே 1975ஆம் ஆண்டு இந்திய நெருக்கடி நிலையின் போது கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவசரநிலைக்கு எதிர்ப்பை ஏற்பாடு செய்து, சில காலம் மறைந்திருந்தார். அவசரநிலைக்குப் பிறகு, இவர் மூன்று (1977-78)[10]முறை சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். யெச்சூரி, பிரகாசு காரத்துடன் இணைந்து இங்கு இடதுசாரிப் பிரிவை உருவாக்கினார்.