- பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரில் நடமாடும் முதலை..
முதலை வேட்டையாடியதில், பசுமாடு மற்றும் இரண்டு ஆடுகள் உயிரிழந்த உள்ளதாக கிராமமக்கள் தகவல். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முதலையை பிடிக்க கோரிக்கை..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதன் அருகில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆறானது அரியலூர் மாவட்டம் தூத்தூர் மற்றும் தஞ்சை மாவட்டம் வாழ்க்கை கிராமங்களை இணைக்கும் பகுதியாக அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் நீராடுவதற்கும், ஆடு மாடுகளை குளிப்பாட்டுவதற்கும், துணிகளை துவைப்பதற்கும், இங்கிருந்து தூத்தூர் பகுதி செல்வதற்கும் இந்த ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது கொள்ளிடம் ஆற்றில் இரண்டு முதலைகள் பசுமாடு மற்றும் இரண்டு ஆடுகளை வேட்டையாடி உள்ளதாக தெரிவித்தனர்.
கொஞ்சம் இதையும் படிங்க :https://thenewscollect.com/if-construction-waste-dumped-in-koovam-river-is-not-completely-removed-fine-will-be-imposed/
முதலைகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்றுக்கு விரைந்து வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாழ்க்கை கிராம மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.