- திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு மற்றும் கிழக்கு உத்தர வீதிகளில் கழிப்பறை கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கு.ஸ்ரீரங்கம் வடக்கு மற்றும் கிழக்கு உத்தர வீதிகளில் கழிவறை கட்டும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு.
வழக்கு தொடர்பாக திருச்சி மாநகராட்சியின் ஆணையர், ஸ்ரீரங்கம் கோவிலின் இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.
திருச்சி ஸ்ரீரங்கம் நகர் நல கூட்டமைப்பின் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அதில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. அவற்றில் மூன்று பிரகாரங்களை சுற்றி குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதில் உத்ரா மற்றும் சித்ரா தெருக்களே ஸ்ரீரங்கநாதசுவாமி கோவிலின் உற்சவங்களுக்காக வலம் வரும் பாதைகளாக உள்ளன.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக திருச்சி மாநகராட்சி உத்ரா தெருவின் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பொது கழிப்பறைகளை கட்ட முடிவு செய்ததுள்ளது.
ஆனால் தெருக்களில் நிரந்தர கழிவறைகளை கட்டினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். மக்கள் சென்று வரவே மிகுந்த சிரமம் ஏற்படும் நிலை உருவாகும். இந்நிலையில் ஒப்பந்ததாரர் பாபுராஜ் வடக்கு உத்திர தெருவில் நிரந்தர கழிவறை அமைப்பதற்காக பள்ளம் தொண்டு பணியை செய்து வருகிறார். அவ்வாறு கழிவறை அமைக்கப்பட்டால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். ஆகவே திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு மற்றும் கிழக்கு உத்தர வீதிகளில் கழிப்பறை கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியாக கௌரி அமர்வு, ” திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு மற்றும் கிழக்கு உத்தர வீதிகளில் கழிவறை கட்டும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு தொடர்பாக திருச்சி மாநகராட்சியின் ஆணையர், ஸ்ரீரங்கம் கோவிலின் இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்