நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் லியோ படத்தில் நடித்து இருந்த நடிகர் மன்சூர் அலிகான், சில நாட்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து தகாத வகையில் பேசியிருந்தார். இது மிகப்பெரிய விவகாரமாக வெடித்தது. திரிஷா முதலில் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க, தமிழ் சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். சக நடிகைகளுடன் பாலியல் வன்புணர்வு காட்சிகள் குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு திரிஷா, குஷ்பூ உள்ளிட்டோர் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன் நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில், தானாக முன்வந்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல். மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள! உணர்ந்துகொள்ள! பெருந்தன்மையைக் கற்றுக் கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம். இந்த சம்பவம் குறித்து மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேசிய மகளிர் ஆணையம் எக்ஸ் பக்கத்தில் நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் தாமதமாக முன்வந்து ஐ.பி.சி பிரிவு 509 பிரிவு மற்றும் விவகாரம் தொடர்புடைய இதுர சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு டி.ஜி.பிக்கு உத்தரவிடுகிறோம். இது போன்ற கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்குகிறது.

இத்தகைய பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு டி.ஜி.பி நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தியதை அடுத்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐ.பி.சி 354 என்கிற 509 ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.