கோவை மாவட்டம், வால்பாறை அருகே வட மாநிலம் சிறுவனை சிறுத்தை தாக்கியதில் சிறுவன் படுகாயம். இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. போலிசார் விசாராணை.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே வட மாநில சிறுவனை சிறுத்தை தாக்கியதில் சிறுவன் படுகாயம் அடைந்து, அந்த சிறுவனை மீட்டு, கோவை மாவட்ட வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி. கோவை மாவட்ட வால்பாறை அருகே உள்ள சுற்று வட்டார எஸ்டேட் குடிருப்பு பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இதனை தொடர்ந்து வன விலங்குகளான யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, போன்ற காட்டு விலங்குகள் உண்வு மற்றும் தண்னிருக்காக தேடி, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா எஸ்டேட் எல்.டி.டிவிஷனில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சஞ்சய் ஓரம். இவரது மகன் பரிதீப் வயது 7.
இவர் தனது வீட்டில் சுமார் 6:30 மணி அளவில் அந்த சிறுவன் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, திடிரென்று தேயிலை தோட்டத்தில் இருந்து எதிர்பாராத விதமாக சிறுத்தை ஒன்று சிறுவனை தாக்கியது. சிறுத்தை அந்த சிறுவனை தாக்கி தேயிலை தோட்டத்தில் இழுத்துச் செல்ல முயற்சித்தது. அந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள அக்கம் பக்கத்தினர் கண்டு கட்டை எடுத்து ஹோய் என்று சத்தம் போட்டதில் அந்த சிறுத்தை சிறுவனை விட்டு, தேயிலை தோட்டத்தில் ஓடியது.

அந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி கோவை மாவட்ட வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனை சிகிச்சையில் தலை மற்றும் கால், கை போன்ற இடங்களில் சிறுத்தையின் பல் மற்றும் நகங்கல் கீரல் போன்ற பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவன் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து வந்த வால்பாறை சரகர் வெங்கடேஷ் மற்றும் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி, போன்ற காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் பாதிக்கபட்ட சிறுவன் குடும்பத்திற்கு வால்பாறை வனத்துறை வன சரகர் வெங்கடேஷ் 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.