திருவாரூர் அருகே திடிரென பெய்த மழையால் மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் பலி.

1 Min Read
உயிரிழந்த முகமது முஜமில்

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில்,திருவாரூர் சுற்று வட்டார பகுதிகளான மாங்குடி ,புலிவலம், அடியக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திடிரென்று காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சிறு சிறு மரக்கிளைகள் முடிந்து விடுவதும் போக்குவரத்து பாதிப்புமாக தொடர்ந்து இருந்து வந்ததது.

- Advertisement -
Ad imageAd image

இதில் அடியக்கமங்கலம் ஜாலாலியா தெருவைச்சேர்ந்த சுல்தான் செலாவுதீன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் 10ஆண்டுகளுக்கு பிறகு  பிறந்த முகமது முஜமில் (11) என்ற மகன் உள்ளார்.‌‌ இவரது மகன் முஜமில் டியூஷன் சென்று சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பி மீது சைக்கிள் உரசி முஜமில் மீது மின்சாரம் தாக்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த தாலுகா போலீசார் சிறுவன் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர்.‌‌ மேலும் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அப்போது உறவினர்கள் தெரிவித்தபோது… கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுதடைந்த மின் கம்பத்தை புதிதாக மாற்றிய நிலையில் தற்போது மின் கம்பி அருந்து விழுந்தது மின் வாரியம் அலட்சியமே என குற்றம் சாட்டினர்.

மேலும் உயிரிழப்பு காரணமாக இருந்த மின்சார வாரிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடாக 20 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a review