குன்னூர் அடுத்த கோத்தகிரியில் வனபகுதியை ஒட்டியுள்ள மலைகிராமத்தில் அடிக்கடி வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிக்கு வருவது வழக்கமாகி வருகிறது.அப்படி அப்பகுதியில் சில நாட்களாக வனவிலங்கு ஒன்று ஊருக்குள் ஊடுருவி வருகிறது.மக்கள் வழக்கம் போல் யானை தான் தண்ணீருக்காக வந்து செல்கிறது என்று நினைத்தார்கள்.ஆனால் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் சமீப கலமாக அதிகரித்து வருவதை நாம் அறிவோம். பெரும்பாலும் காட்டு யானைகள் தான் கோவை பகுதிகள் தற்போது நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் கோத்தகிரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடங்கியுள்ளது.பலர் சிறுத்தை நடமாட்டம் பற்றி கூறும்போது யாரும் நம்பவில்லை.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே இன்று அதிகாலை நேரத்தில் குடியிருப்புகள் நுழைந்த கருஞ்சிறுத்தையால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.அதன் சிசிடிவி காட்சிகளை கண்ட போது தான் சிலர் நம்பத்தொடங்கினர்.
கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிரித்து வருகிறது.வன பகுதியில் வன விலங்குகளுக்கு தேவையான உணவு கிடைக்காத நிலையில் விளை நிலங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைய தொடங்கியுள்ளன. இந்தநிலையில் கோத்தகிரி அருகே அரவேனு பெரியார் நகர் குடியிருப்புக்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை ஒன்று தொடர்ந்து குடியிருப்புக்குள் உலா வந்த வண்ணம் உள்ளது.
அந்த காட்சி அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் அவர்கள் இரவு நேரத்தில் வெளியே நடந்து செல்லும் போது கருஞ்சிறுத்தை தாக்கி விடுமோ என்ற அச்சம் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே கருஞ்சிறுத்தை தாக்கி பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் குழந்தைகள்,முதியவர்கள் யாரும் நடமட முடியவில்லை அச்சத்துடனே பொது மக்கள் இயங்க வேண்டியுள்ளது.