கடந்த சில காலங்கலாக பிரியாணி மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.அதையே பயன்படுத்திக்கொண்டு பிரியாணி கடைக்காரர்களும் பல அதிரடி அறிவிப்புகளை மக்களிடையே புதிய புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ரூபாய் பிரியாணி அறிவிப்பு வேலூரில் அறிவிக்கப்பட்டு மக்களை வெயிலில் நிற்க வைத்த சம்பவத்தை அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரியாணிக் கடைக்கு சீல் வைத்தார்.

இதே போன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் புதிதாக தொடங்கப்பட்டது பிரியாணி ஹோட்டல். இவர்கள் தங்கள் கடை விளம்பரத்திற்காக இன்று ஒரு நாள் மட்டும் பத்து ரூபாய் துட்டு கொடுத்தால் ஒரு சிக்கன் பிரியாணி என்று விளம்பரப்படுத்தி இருந்தனர்.
இந்த செய்தி காற்றாய் பரவி ஐநூறுக்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றும், முண்டியடித்துக் கொண்டும் போட்டி போட்டுக் கொண்டு பத்து ரூபாய் துட்டை கொடுத்து ஒரு பிரியாணியை அள்ளிச் சென்றனர். கூட்டத்தை ஒழுங்குபடுவதற்கு விரைந்து வந்த போலீசார் அனைவரையும் ஒழுங்குபடுத்தி நிற்க வைத்து வரிசையில் செல்லுமாறு அறிவுறுத்தினர் பத்து ரூபாய் துட்டுக்கு ஒரு பிரியாணி நிகழ்வு கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது