திருச்சி மாவட்டத்தில் அருகே குண்டுமணிப்பட்டியில் புதிய அங்கன்வாடிக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. அந்த புதிய அங்கன்வாடிக் கட்டிடத்தில் பள்ளக் குழி தோண்டப்பட்டுள்ளது .குழி பறித்த பள்ளத்தில் 6வயது பெண் குழந்தை விழுந்து பலி – உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் தாலுகா குண்டுமணிப் பட்டியைச் சேர்ந்தவர் வேதாச்சலம் வயது (35) இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கல்பனா வயது (32) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இந்துஜா வயது (8 ) ,சஹானா வயது (6) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இரண்டு பெண் குழந்தைகள் குண்டுமணிப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் இந்துஜா 3-ஆம் வகுப்பும், சஹானா 1- வகுப்பும் படித்து வருகின்றார்கள். சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டு வந்த புதிய அங்கன்வாடிக் கட்டிடம் அருகே விளையாட சென்ற சஹானா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர்.
பின்பு குண்டுமணிப்பட்டியில் புதிய அங்கன்வாடிக் கட்டிடம் கட்ட கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளம் ஒன்று தோண்டப்பட்டுள்ளது அந்த பள்ளத்தில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் நீர் தேங்கி பள்ளம் தெரியாமல் இருந்துள்ளது.

இந்த பள்ளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சஹானா எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்துள்ளார். பள்ளத்தில் விழுந்த சஹானா அழுது கூச்சலிட்டார்.அச்சத்தம் அருகில் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த யாருக்கும் கேட்காதால் சஹானா பள்ளத்தில் முழ்கினார்.இதில் சஹானா பரிதாபமாக உயிர் இறந்து போனார்.

இது குறித்து காட்டுப்புத்தூர் போலிசாருக்கு தகவல் தெறிவிக்கப்பட்டது.பின்னர் தகவல் அறிந்து காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஹானாவில் உடலை கைப்பற்றி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அந்த பெண்ணின் உடலை முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.