தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.இதனால் பொது மக்கள் பல நேரங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.பெரும்பாலும் தமிழக கேரள எல்லையில் உள்ல பல வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புகுள்ளாகி வருவதை தினம் தோறும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி , சோளையூர் அருகே உள்ளது வரகம்பாடி கிராமம். நேற்று அதிகாலை தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்திலிருந்த மின்வேலியில் சிக்கி 6 வயது மதிக்கத்தக்க குட்டி கொம்பன் யானை உயிரிழந்தது. மின்வேலியிலிருந்து நேரடியாக மின்சாரம் யானையின் மீது பாய்ந்ததால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

பிரேத பரிசோதனைக்கு பின் யானையின் உடல் தகனம் செய்யப்பட்டது. நில உரிமையாளர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.யானைகள் தொடர்ந்து விவசாய நிலத்தில் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில் விவசாயிகள் மின் வேலி அமைத்துள்ளனர்.ஆனாலும் அது சட்டவிரோதமானது தான்.