250-ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த, நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு. வேதனையில் விவசாயிகள்..

1 Min Read
  • தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையினால், மெலட்டூர் சேத்து வாய்க்கால் மற்றும் பாப்பா வாய்க்கால் பகுதியில் அதிகமாக தண்ணீர் வருவதால் சம்பா பருவத்தில் நடவு செய்திருந்த பலநூறு ஏக்கர் நெல் நடவு வயல்களில் தண்ணீர் தேங்கி நெல்பயிர்கள் முற்றிலும் அழுகி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 20-ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்த சம்பா பயிர்கள், முற்றிலும் அழுகி வீணாகும் நிலை உள்ளதாகவும்,

கரம்பை, அத்துவானப்பட்டி, நரசிங்கமங்கலம், ஏர்வாடி உள்ளிட்ட பல பகுதிகளில் முக்கிய வடிகால் வாய்க்காலான சேத்து வாய்க்கால் அதன் பிரிவு வாய்க்கால்கள் சுமார் 10-ஆண்டுகளுக்கு மேலாக தூர்வார படாததால், வயல்களில் தண்ணீர் நிரம்பி, தற்போது பெய்து வரும் தொடர்மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி கைகளால் தண்ணீரை இறைக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

- Advertisement -
Ad imageAd image

தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை இருந்து வருவதாகவும், இதனால் 250-ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கும் விவசாயிகள்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-public-engaged-in-a-sapling-protest-demanding-the-repair-of-the-potholed-road/#google_vignette

போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், சேத்துவாய்க்கால், பாப்பாவாய்க்கால் உள்பட பிரிவு வாய்க்கால்களை உடனடியாக தூர் வாரிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்..

Share This Article
Leave a review