திருவள்ளூர் அடுத்த
திருவலாங்காடு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் வயது(25) இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் அதே பகுதியில் ஒருவர் வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் மகள் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்
இந்நிலையில் எலக்ட்ரீசியன் வேலை செய்ய வந்து லோகேஷ்க்கும்
வீட்டில் உரிமையாளரின் பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

பல நாள் பழகி வந்த இருவரும் ஒரு காலகட்டத்தில் லோகேஷ் அந்த பெண்ணிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட காதலி அதை அப்படியே நம்பிவிட
எலக்ட்ரிஷன் லோகேஷ் அந்த 17 வயது சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அந்த பெண்ணிடம் வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த மாணவி தனக்கு நடந்த சோகத்தை தன் வீட்டில்
உள்ள பெற்றோரிடம் கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் எலக்ட்ரிஷன் லோகேஷ் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் தாய் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் நிலைய ஆய்வாளர்,இளைஞரை கைது செய்யப்பட்டு
போஸ்கோ வழக்கு பதிவு செய்து,நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.