பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுக்காக செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூரில் பத்து விதமான சிலம்பம் கலைகளை 10 நிமிடத்தில் சுற்றி 9 வயது மாணவி உலக சாதனை படைத்துள்ளார் .
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் 4 ஆம் வகுப்பு படித்து வருபவர் மௌசிகா ஸ்ரீ. ஒன்பது வயது மாணவியான மௌஷிகா ஸ்ரீ பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் கலைகளான நெடுக்கம்பு , நடு கம்பு , இரட்டைக் கம்பு , வால் வீச்சு, ரிப்பன் பால் , பஞ்சாப் பால் , தீபந்தம் சுருள்வால் , தராசு வேல் , கம்பு என பத்து வகையான சிலம்பக் கலைகளை பத்தே நிமிடத்தில் சுற்றி சாதனை புரிந்தார்.
மாணவிக்கு இந்தியா உலக சாதனை புத்தகம் , அமெரிக்கா உலக சாதனை புத்தகம் மற்றும் யூரோப்பா உலக சாதனை புத்தகம் என மூன்று சாதனை உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து இவருக்கு சாதனைக்கான சான்றிதழும் கேடயமும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் கலந்து கொண்டு மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் தேசிய பிரசிடெண்ட் அந்தோணி மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரபாகர் மாணவியின் பயிற்சியாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/countdown-starts-for-traitors-panchayat-heads-husband-arrested-for-posting-death-threat-messages-in-facebook/
மேலும் இவரது சாதனைக்கு உறுதுணையாக இருந்த இவரது பயிற்சியாளர் பார்த்திபன் கூறுகையில் தற்போது உள்ள சூழலில் பெண்கள் தற்காப்பு கலையை கட்டாயம் அனைவரும் கற்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சிலம்பம் கலைக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பதால் மாணவர்கள் தமிழர் கலையான சிலம்ப கலையை பகிர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.