மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததாக காவல் நிலையத்திற்கு மயக்க நிலையில் உள்ள சிறுவனை தூக்கி கொண்டு வந்து பெற்றோர் புகார் , இளைஞரை கைது செய்து மயிலாடுதுறை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தில் 9 வயது சிறுவனுக்கு இளைஞர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்ததால் மயக்க நிலையில் இருந்த சிறுவனை தூக்கிக்கொண்டு மயிலாடுதுறை காவல் நிலையம் வந்து பெற்றோர் இந்திரஜித் புகார் அளித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் தன் மகன் மற்றும் மற்றொரு சிறுவனுக்கு மதுவை ஊற்றி குடிக்க வைத்து உள்ளதாகவும், இதனால் மது போதையில் சிறுவன் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாகவும் . சிறுவனை தூக்கிக்கொண்டு நேரடியாக காவல் நிலையத்துக்கு வந்து பெற்றோர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக மயிலாடுதுறை போலீசார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த இளைஞரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அறிவழகனை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மது குடித்ததால் மயக்கம் ஏற்பட்ட சிறுவனுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் உடல்நலன் தேறி உள்ளார்.சிறுவர்களை பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பில் வைக்க தவறினால் இது போன்ற விபரீத சம்பவங்கள் அரங்கேறும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாக உள்ளது.