- இந்திய சினிமா என்றால் அது இந்தி சினிமா தான் என இருந்த மாயையை தற்போது தென்னிந்திய சினிமாக்கள் உடைத்து வருகின்றது. அதில் பல கலைஞர்களுக்கு முக்கிய பங்கு இருந்தாலும், தெலுங்கு சினிமா உலகில் இருந்து மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் நடிகர்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் என பலர் இருக்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் பிரபாஸ்க்கு தனி இடம் உண்டு என்றே கூறவேண்டும். அப்படியான நடிகரான பிரபாஸ்க்கு இன்று 45வது பிறந்த நாள். இந்நிலையில் அவரது சம்பளம் அவரது சொத்துமதிப்பு கைவசம் உள்ள படங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகர் பிரபாஸ் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அப்போது அவரது வயது 24. தனது 24 வயதில் இருந்து நடிக்கத் தொடங்கிய பிரபாஸ் கடந்த 22 ஆண்டுகளில் 23 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். வெறும் 23 படங்களில் மட்டும் நடித்து இந்திய சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்றால், அவரது கதைத்தேர்வு, அதற்கேற்ற உழைப்பு மற்றும் அர்பணிப்பு என அனைத்துமே புலப்படும். தனது ஆரம்பகால சினிமாவில் காதல் படங்களில் நடித்து வந்த பிரபாஸ் அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஷன் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்து தன்னை ஒரு முழுமையாக ஆக்ஷன் கதாநாயாகனாக மாற்றினார்.
இவரது 15வது படமான ரிபெல் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால், ரிபெல் ஸ்டார் என அழைக்கப்படுகின்றார். வசூல் மன்னன்: கடந்த 2015ஆம் ஆண்டில் வெளியான பாகுபலி முதல் பாகம், 2017ஆம் ஆண்டு வெளியான பாகுபலி இரண்டாம் பாகம் என இந்த இரண்டுப் படங்களும் தெலுங்கு சினிமாவைக் கடந்து மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவைக் கடந்தும் இவரை அடையாளம் காட்டியது.
இந்தப் படத்திற்காக இவர் செலுத்திய உழைப்பு அனைத்திற்கும் பலன் மேல் பலன் கிடைத்தது. இதனால் இவரது சம்பளம் உயர்ந்தது மட்டும் இல்லாமல், இந்தியாவே உற்று நோக்கும் நடிகராக மாறினார். பாகுபலி வசூல் ரீதியாக ரூபாய் 2000 கோடிகளைக் கடந்து வசூல் செய்தது. இவரை நம்பி நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக இருந்தது. இவரது நடிப்பில் பாகுபலிக்குப் பின்னர் அதிக பொருட்செலவில் உருவான படமாக சலார் வெளியானது.
சலார் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் அடி வாங்கினாலும், இந்தப் படத்தின் இரண்டாம்பாகம் படக்குழுவுக்கு லாபத்தை பலமடங்காக மாற்றிக்கொடுக்கும் என கூறப்படுகின்றது.
அதேபோல் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் கல்கி 2898 ஏ.டி. இந்தப் படம் கிட்டத்தட்ட 600 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட படம். இப்படம் வசூல் ரீதியாக 1200 கோடிகளைக் கடந்து வசூலித்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு அல்லது 2026ஆம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர் இன்று தனது 45வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபாஸ் ஒரு படத்திற்கு ரூபாய் 100 கோடிகளில் இருந்து ரூபாய் 200 கோடிகள் வரை சம்பளமாகப் பெறுகின்றார். இதுமட்டும் இல்லாமல் இவரது சொத்து மதிப்பு ரூபாய் 240 கோடிகள் எனவும் கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல், பிரபாஸிடம் 84 ஏக்கர் நிலம் உள்ளது. ஒரு ஆடம்பரமான பங்களா உள்ளது. இந்த பங்களாவின் மதிப்பு கிட்டத்தட்ட ரூபாய் 60 கோடிகள் இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த சொகுசு பங்களாவில் நீச்சல் குளம், நவீன ஜிம், மிகவும் ஆடம்பரமான அறைகள் உள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-enforcement-department-raided-the-house-of-former-admk-minister-vaithiyalingam/
இதுமட்டும் இல்லாமல் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், ஒரு ஜாக்குவார், ஒரு பி.எம். டபள்யூ, ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் என மிகவும் ஆடம்பரமான கார்களும் உள்ளது. இவரது நடிப்பில் அடுத்து கல்கி 2898 ஏடி படத்தில் இரண்டாம் பாகம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. இதுமட்டும் இல்லாமல் மாளவிகா மோகனுடன் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.