ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர் உட்பட 8 பேர் கைது 2 துப்பாக்கி பறிமுதல்

0
128
துப்பாக்கிகள்

விருத்தாசலம் அருகே தேர்தல் முன்விரோத தகராறில் திமுக கட்சி உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு மருத்துவமனையில் அனுமதி துப்பாக்கியால் சுட்ட அதிமுக ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் புகழேந்தி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கி ஒரு கார் இரண்டு ஸ்கூட்டி இரண்டு இரும்பு பழுப்பு ஒரு கத்தி பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் இவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ இவரது மகன் இளையராஜா இவர் திமுக கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

இவருடைய அண்ணன் நீதிராஜன் மணவாளநல்லூர் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவருக்காக போட்டியிட்டார் இவரை எதிர்த்து ராஜசேகர் அரசு ஊழியர் இவரது மனைவி மங்கையர்கரசி போட்டியிட்டார் இதில் நீதிராஜன் வெற்றி பெற்றார் இந்த நிலையில் இரண்டு பேருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்த நிலையில்.

மணவாளநல்லூர் கிராமத்தில் இளையராஜா குடும்பத்திற்கும் ராஜசேகர் குடும்பத்திற்கும் தேர்தல் முன்விரதம், இடம் பிரச்சனை, கோவில் பிரச்சனை, என பல்வேறு முன் விரதம் இருந்து வந்தது

இந்த நிலையில் இளையராஜா  கடந்த 8 மாதம் முன்பு ராஜசேகரின் மகன் ஆடலரசனை வயலில் வைத்து இளையராஜா,
நீதிராஜன் மற்றும் அவர்களது கூட்டாளிகள் 5 பேர் சேர்ந்து  கத்தியால் சரமாரி தாக்கி உள்ளனர் இதில் ஆடலரசன் பலத்த காயம் ஏற்பட்டார் இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்.

நேற்று இளையராஜா தனது வயலில் உள்ள செங்கல் சூலையிலிருந்து காரில் புறப்படும் பொழுது அப்பொழுது ராஜசேகர் மகன்கள் ஆடலரசன் அவரது அண்ணன் புகழேந்தி மற்றும் அவரது கூட்டாளிகள் விஜயகுமார் சேர்ந்து கொண்டு விஜயகுமார் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இளையராஜாவை  சுட்டுள்ளனர் இதில் காயமடைந்த இளையராஜாவை  விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பாண்டிச்சேரி பிலிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் தலைமையில் 3 தனிப்படை பிரிவு போலீசார் அமைத்து தேடி வந்தனர் பின்னர் அவர்களை கோபுராபுரம் பகுதியில் மறைந்திருந்த  புகழேந்தி, ஆடலரசன், விஜயகுமார், சூர்யா, வெங்கடேசன், சரவணன், அருண், சதீஸ்வரன் உட்பட 8 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர் அப்பொழுது விஜயகுமார் தப்ப முயற்சிக்கும் பொழுது அவர் பள்ளத்தில் விழுந்து இடது கால் மற்றும் வலது கை காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் ஆடல் அரசன் தலைமையில் இளையராஜாவை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது தெரியவந்தது

இந்த நிலையில் அவர்களிடம் இருந்து இரண்டு கை துப்பாக்கி, கார் ஒன்று இரண்டு ஸ்கூட்டி இரண்டு பைப்பு ஒரு கத்தி பறிமுதல் செய்துள்ளனர்

எட்டு மாதம் முன்பு திமுக பிரமுகர் இளையராஜா  ஆடலரசனை கத்தியால் வெட்டியதற்காக இன்று ஆடலரசன் பழி வாங்குவதற்காக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here