ரூ.24 கோடி மதிப்பிலான 8 கிலோ ஐஸ் கேட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல்: டிடிவி கண்டனம்

1 Min Read
டிடிவி தினகரன்

தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் பொறுப்பற்றத் தன்மை கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார் .

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தூத்துக்குடி மாவட்டம் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ ஐஸ் கேட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சென்னையில் தொடங்கி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தாராளமாக புழங்கிக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களின் விற்பனை குறித்தும், அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் குறித்து பலமுறை புகார் அளித்தும் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஆளும் திமுகவின் செயல்பாடுகள் எதிர்கால தலைமுறையான இளைஞர்களின் நலன் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகின்றன.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

எனவே, தூத்துக்குடியில் போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணையை மேற்கொண்டு, அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்வதோடு, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review