தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 மணி நிலவரப்படி72.09 சதவீதம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 39 தொகுதிகளிலும் காலை 6 மணி தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. இதில், 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டு தேர்தல் அலுவல அதிகாரிகள் செயல்பட்டனர்.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் காலை முதல் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தனர். மேலும், பொதுமக்களும் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். பின்னர், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மந்தநிலை ஏற்பட்டது.
இதையடுத்து, வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தற்போது, தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 மணி நிலவரப்படி72.09 சதவீதம் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 75.67% வாக்கு பதிவாகியுள்ளது.
விருதுநகர்- 72.99
திண்டுக்கல்- 71.37
கிருஷ்ணகிரி- 72.96
வேலூர்- 73.04
பொள்ளாச்சி- 72.22
நாகப்பட்டினம்- 72.21
தேனி- 71.74
நீலகிரி- 71.07
திருநெல்வேலி- 70.46
மதுரை- 68.98
ஸ்ரீபெரும்புதூர்- 69.79
சென்னை வடக்கு- 69.26
சென்னை தெற்கு- 67.82
சென்னை மத்தி- 67.35
கடலூர்- 72.40
தஞ்சாவூர்- 69.82
மயிலாடுதுறை- 71.45
சிவகங்கை- 71.05
தென்காசி- 71.06
ராமநாதபுரம்- 71.05
கன்னியாகுமரி- 70.15
திருப்பூர்- 72.02
திருச்சி- 71.20
தூத்துக்குடி- 70.93
கோவை- 71.17
காஞ்சிபுரம்- 72.99
திருவள்ளூர்- 71.87
ஆரணி- 73.77
கரூர் – 74.05
பெரம்பலூர்- 74.46
சேலம்- 74.55
சிதம்பரம்- 74.87
விழுப்புரம்- 73.49
ஈரோடு- 71.42
அரக்கோணம்- 73.92
திருவண்ணாமலை- 73.35