நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நேற்று மிளகாய் பொடி தூவி நகை வியாபாரியிடம் முகமூடி கும்பல் ரூ1.5 கோடி வழிபறி செய்த சம்பவத்தில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் நகை வியாபாரி சுஷாந்த் . இவர் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரையில் உள்ள நகை வியாபாரியான தனது உறவினரிடம் நகைகளை மொத்தமாக வாங்கி நெல்லை பகுதியில் உள்ள சிறு சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் .
நேற்று காலை நகை வாங்குவதற்காக தனது காரில் உதவியாளருடன் நெய்யாற்றங்கரை சென்று கொண்டிருந்த போது நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அருகில் சுஷாந்தின் காரை பின்தொடர்ந்து வந்த முகமூடி கும்பல் மிளகாய் பொடி தூவி அவரை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றது.
இது குறித்து மூன்றடைப்பு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் வள்ளியூர், களக்காடு, விஜயநாராயணம் உள்பட 7 காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
இதனை அடுத்து ஏழு தனிப்படையினரும் தனித்தனி குழுக்களாக பிரிந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளை கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
அதில் இறுதியாக சுஷாந்தின் காரை நெடுங்குளத்திற்கு கொண்டு சென்று பணத்தை எடுத்து விட்டு திரும்பும் போது அதன் அருகில் உள்ள ஒரு வீட்டில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களின் கார்களை அடையாளம் கண்டுள்ளனர்.
இதனை அடுத்து நெல்லை மாவட்டத்தில் சாலையோரம் உள்ள பல்வேறு ஊர்களில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை கும்பல் வந்த கார் அம்பாசமுத்திரத்தை நோக்கி சென்றது தெரிய வந்துள்ளது . மேலும் நகை வியாபாரி சுஷாந்த் கொண்டு சென்ற 1.5 கோடி ரூபாய் கணக்கில் வராத கருப்பு பணம் என்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்தும் விசாரணைகள் நடந்து வருகிறது. வாகனங்கள் அதிகம் சென்று வரும் தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய விசுவல் பயன்படுத்தி கொள்ளவும்..