ஓசூரில் அமைதுள்ள 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த உதவி வருவாய் அலுவலர் உட்பட 7 பேர் கைது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஓசூர் கோகுல் நகர் பகுதியில் உள்ள பகுதி 16 ல் நிலங்களை வாங்கி வீடுகள் கட்டி விற்பனை செய்து வந்தது, இந்த வீடுகள் குலுக்கல் முறையில் விற்பனை நடைபெற்றது. இங்குள்ள 4 வீட்டு மனைகளை சில நபர்கள் போலியாக ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்தது ஒசூர் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கருக்கு புகார் சென்றுள்ளது. இதன் மதிப்பு 3.5 கோடி ரூபாய் ஆகும்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அவர், வீட்டு மனைகள் மோசடி நடந்திருப்பது உண்மை என தெரிய வந்ததால் செயற்பொறியாளர் பாஸ்கர் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் அறிவுரைப்படி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜா, ரவி தங்கம் தலைமையில் ஆய்வாளர் சாவித்திரி உட்பட தனிப்படை போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் போலீஸார் ஒசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் ஆராவமுதுவை கைது செய்தனர், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மதி என்கிற மதியழகன் (இவர் ஏற்கனவே ஈரோடு பகுதியில் ஈமு கோழி விற்பனையில் 10 வருடம் சிறை தண்டனை பெற்றவர்) என்பவரையும் அவருடன் உடந்தையாக இருந்த ஓசூர் பகுதியை சேர்ந்த சதீஷ் ,டேனியல், ஸ்ரீதர், முருகதாஸ், ஆனந்த் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 13 செல்போன்கள், 62 ஏ டி எம் கார்டுகள், 2 கார்கள ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.அரசு நிலத்தையே அரசு அலுவலர் முறைகேடு செய்து விற்பணை செய்துள்ளது அரசு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
