- தஞ்சை நகரில் வைக்கப்பட்ட 60 விநாயகர் சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பேரணையாக எடுத்துச் செல்லப்பட்டு தஞ்சை வடவாற்றில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் தமிழகம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 700 விநாயகர் சிலைகளும் தஞ்சை நகரப் பகுதியில் 75 விநாயகர் சிலைகளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று கும்பகோணம் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட நிலையில் இன்று தஞ்சை நகரில் வைக்கப்பட்ட 75 விநாயகர் சிலைகள் 60 சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து மேளதாளம் முழங்க பேரணியாக எடுத்துச் செல்லப்பட்டு தஞ்சை வடவற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு தஞ்சை காந்திஜி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மாற்று வழியில் பேருந்துகள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.