கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள எஸ்.ஏ.பாட்ஷா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரம்ஜான் பண்டிகைக்காக15 நாட்கள் பரோலில் சென்ற பாட்ஷா , ரம்ஜான் பண்டிகை முடிந்த நிலையில்,நேற்று மாலை கோவை மத்திய சிறைக்கு திரும்பினார்.சிறைக்கு வந்ததில் இருந்தே உடல் நலம் சுகமில்லாத நிலையிலே இருந்துள்ளார் பாஷா.
இந்த நிலையில் கோவை மத்திய சிறை வாசலில்
பாட்ஷாவிற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது அதை தொடர்ந்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 58 பேர் கொல்லப்பட்டனர், 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாஜக தலைவர் அத்வானி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவிருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களிலும் குண்டுகள் வெடித்தன.
இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர்.அல் உம்மா இயக்கமும் தடை செய்யப்பட்டது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 22 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷாவை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிலையில் பாஷா உடல் நலக்கோளாறு காரணமாக தற்போது உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பாஷா.