- தஞ்சை காந்திஜி சாலை, அண்ணாசாலை, ராஜாமிராசுதார் மருத்துவமனை சாலை, பழைய பேருந்து நிலையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளியை ஓட்டி சாலையோரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் போடப்பட்டன.
விற்பனை முடிந்ததும், வியாபாரிகள் விட்டு சென்ற குப்பைகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மக்கள் வெடித்த பட்டாசு குப்பைகள் சாலைகள் முழுவதும் குவிந்து கிடந்தன.
இன்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வழக்கமாக 150 டன் முதல் 200 டன் வரை குப்பைகள் சேரும். ஆனால் தீபாவளி பட்டாசு குப்பைகள் சேர்த்து வழக்கத்தை விட 300 டன் அதிகமாக அகற்றி உள்ளனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/tourists-thronged-the-world-famous-thanjavur-big-temple-on-the-occasion-of-a-series-of-holidays/
கடந்த ஆண்டு தீபாவளி குப்பைகளை விட இந்த ஆண்டு அதிகம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.