நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. மக்களின் அடிப்படை பிரச்னைகள் உள்ளிட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஆக்கப்பூர்வ செய்திகளை வெளிப்படுத்துவதில் துடிப்புடன் செயல்பட்டு வருபவர்.
நேற்று முழுவதும் வழக்கம்போல் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நேசபிரபுவை, கார் மற்றும் பைக்கில் வந்த மர்மநபர்கள் பின் தொடர்ந்து நோட்டம் விட்டுள்ளனர். மேலும் அவர் குறித்து, அவரது உறவினர்களிடமே விசாரித்தும் சென்றுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர் நேசபிரபு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.
காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உள்ளூர் காவல்நிலையமான காமன்நாயக்கன்பாளையம் போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேசபிரபுவை தொடர்பு கொண்ட காமன்நாயக்கன்பாளையம் போலீசார் புகார் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்:
அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் கடும் கண்டனம். தமிழக அரசே பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி உதவி வழங்கு.
கொலைவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு . இவரை நேற்று 24-01-2024 புதன்கிழமை இரவு , செய்தியாளர் அவரது வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியுள்ளனர்,

உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய செய்தியாளர் நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
செய்தியாளரின் அனைத்து விதமான சிகிச்சியையும் அரசே ஏற்க வேண்டும்.
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவதை அனைத்திந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமுக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறது.இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அனைத்திந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.என அந்த அறிக்கையில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்க தேசியத்தலைவர் தெரிவித்துள்ளார்.