ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கிட்டு தற்கொலை-கேரளாவில் அதிர்ச்சி

1 Min Read
தற்கொலை செய்து கொண்டவர்கள்

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தன் வீட்டில் மூன்று பிள்ளைகளையும் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று தூக்குப் போட்டு கொலை செய்த பின்பு ஸ்ரீஜாவும், ஷாஜியும் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

கேரள மாநிலம் கண்ணூர் அருகே செறுபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவருக்கும் தனக்கும் ஏற்பட்ட மனக்கசம்காரமாக பிரிந்தார் ஸ்ரீஜா.கணவனால் கைவிடப்பட்ட இவர் கடந்த 16ம் தேதி ஷாஜி  என்பவரை  இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். ஷாஜிக்கு  ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஷாஜி தனது மனைவியிடம் சட்டப்பூர்வமாக  விவாகரத்து பெறாமல் வேறொரு திருமணம் செய்துள்ளார்.

‌‌இந்நிலையில், இவரது வீட்டுக் கதவு காலையில் நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது பார்த்தவர்களுக்கு ஒரு மாபெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது  ஷாஜி ,ஸ்ரீஜா அவர்களின் மூன்று பிள்ளைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள்  காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள்

‌‌ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

குறித்துத்  தகவலறிந்து வந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் மீட்டு  பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

‌‌மூன்று பிள்ளைகளையும் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று தூக்குப் போட்டு கொலை செய்த பின்பு ஸ்ரீஜாவும், ஷாஜியும் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தம்பதியர் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

‌‌

Share This Article
Leave a review