மரக்காணம் பகுதியில் 5 லிட்டர் பயன்படுத்தி உள்ளனர். மீதம் 95 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது-அமைச்சர் பொன்முடி

1 Min Read
அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம், ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு, மாவட்டத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்தார்.

- Advertisement -
Ad imageAd image

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் போலி மதுபான விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க ஏதுவாக, வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.

அமைச்சர் பொன்முடி

மதுரவாயில் பகுதியில் இருந்து மரக்காணம் பகுதிக்கு 100 லிட்டர் மெத்தனால் வந்துள்ளது. அதில், 5 லிட்டர் அளவுக்கு பயன்படுத்தி உள்ளனர். மீதம் 95 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் உத்தரவின் பேரில், மரக்காணம் சம்பவம் போன்று கள்ளச்சாராய மரணம், இனி மாவட்டத்தில் எங்கும் நடைபெறாமல் தடுப்பதற்கு, தயவு தாட்சனை இல்லாமல் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க, ஆய்வு கூட்டத்தில் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, தங்கள் பகுதியில் எங்காவது போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, மேல்பாதி கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான திரெளபதி அம்மன் கோயிலில், சாதிய வேறுபாடு இல்லாமல் அனைவரும் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். இதுபற்றி, இங்கே வந்தவர்களிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவித்துள்ளேன். பட்டியலின மக்கள் இன்று முதல் கோயிலுக்குள் செல்லலாம். அக்கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் நடந்ததை மறந்து, இனி ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்சனையை வைத்து, சிலர் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். அவர்கள் செய்ய நினைப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்.

Share This Article
Leave a review