நீட் தேர்வுக்கு எதிராக 5 லட்சம் கையெழுத்துக்களை பெற வேண்டும் – அமைச்சர் பொன்முடி..!

2 Min Read

தேசிய தகுதி நுழைவு தேர்வு (நீட்) ரத்து செய்ய கோரி 50 நாட்களில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பிரச்சாரத்தை திமுகவினர் தொடங்கினர். தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக 5 லட்சம் கையெழுத்துக்களை பெற வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி. திமுக கட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு இளைஞர் அணியை முன்னெடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடத்தவிருக்கும் மாநாட்டிற்கு விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் சார்பில் பெருந்திரளாக இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி

அதேபோன்று நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமாக கையெழுத்து பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தை இந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் கையெழுத்துக்கள் பெற வேண்டும். அதற்காக நாளை என்னுடைய தலைமையில் திருக்கோயிலூர் அரசு கல்லூரி முன்பாக கையெழுத்து இயக்கத்தை தொடங்க இருக்கிறேன். அதற்கு அடுத்த நாள் விழுப்புரம் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக கையெழுத்து இயக்கம் தொடங்க இருக்கிறேன்.

அமைச்சர் பொன்முடி

இதில் மருத்துவ அணி, மாணவர் அணி மற்றும் இளைஞரணி ஆகியவர்கள் முன் நின்று கையெழுத்து இயக்கத்தை செயல்படுத்த வேண்டும். அதனை தொடர்ந்து மாணவர்கள் மட்டுமல்லாமல் அவருடைய பெற்றோர்களிடமும் கையெழுத்து இயக்கம் தொடங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். மாநில சுயாட்சியை காப்பாற்ற முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதனால் தான் ஆளுநர் மீது கூட உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து இருக்கிறார் தமிழக முதலமைச்சர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

 

Share This Article
Leave a review