திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா கீரனூர் என்ற ஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன் அவர் அருகில் உள்ள 3 கூத்தனூர் என்ற ஊருக்கும் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார் இந்த நிலையில் இன்று ஆறுமுகம் என்பவருக்கு பட்டா மாறுதல் செய்வதற்காக 4500 லஞ்சம் வாங்கிய பொழுது
திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் அருள், சித்ரா ,ஆரோக்கிய மேரி , மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கொண்ட குழு
கார்த்திகேயனை கையும் களவுமாக பிடித்தது . கையும் களவுமாக மாற்றிய கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்….