திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி கேமராக்கள் உடைத்து எடுத்து சென்ற சம்பவத்தில் 14 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது.போலீசார் விசாரணை குற்றச்செயலை தடுக்கவே சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த சிசிடிவி கேமராக்களையும் உடைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வெள்ளக்குட்டை என்ற கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி விவசாயம் செய்து வருகிறார்.ராமமூர்த்திக்கும் அருகில் உள்ளவர்களுக்கும் வெள்ளக்குட்டை கிராமத்தில் ஒரு நிலத்தகராறு காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரச்சனை ஏற்பட்டது,பிரச்சனை அதிகமாகவே அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் உட்பட 8 பேரும் சேர்ந்து ராமமூர்த்தியை கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் விசாரித்த போலிசார் 14 வயது சிறுவன் உட்பட 8 பேரும் வலைவீசி பிடித்து அவர்களை கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்.

வெள்ளக்குட்டை கிராமத்தில் நிலத்தகராறு பிரச்சனைக்குரிய அந்த நிலத்தை முழுவதும் கண்காணிக்க கொலை செய்யப்பட்ட ராமமூர்த்தியின் மகன் தினேஷ்குமார் நிலத்தில் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி காட்சிகளை கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி இரவு அங்கு நிலத்தில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சில மர்மநபர்கள் கல்லால் உடைத்து சேதப்படுத்தி கேமராக்களை எடுத்து சென்றுள்ளனர். இதனைக் கண்ட தினேஷ்குமார் அருகில் உள்ள ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஏற்கனவே இவருடைய தந்தை ராமமூர்த்தி கொலை வழக்கில் கைதான 15 வயது சிறுவன், சிறுவனின் தந்தை மகேந்திரன், பார்த்திபன், விமல்குமார் உள்ளிட்ட ஆகியோர் 4 பேரையும் போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தினேஷ் குமாரின் தந்தை கொலை வழக்கில் ஈடுபட்டவர்களே இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.