தஞ்சாவூர் அருகே காதலர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறிப்பு 4 பேர் கைது .!

2 Min Read
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக இருந்த காதலர்களுக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கும்பல் . நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள ஒரு குற்றவாளிக்கு தேடுதல் வேட்டை .

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 24). இவர் தனது காதலியுடன் திருமானூருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தஞ்சை – திருவையாறு புறவழி சாலையில் சென்றபோது தமிழரசனின் காதலிக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டது.

இதற்காக அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அங்கு வந்த 5 பேர் திடீரென தமிழரசன், அவரது காதலியை மிரட்டி பணம் கேட்டனர். பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.

அதற்கு தமிழரசன் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் வீட்டில் யாரிடமாவது இருந்து கூகுள் -பே மூலம் பணம் அனுப்புமாறு மிரட்டினர். இதனால் உயிருக்கு பயந்து தமிழரசன் காதலி அவரது வீட்டில் சகோதரி மூலம் கூகுள் பே-லிருந்து ரூ.3000 அனுப்புமாறு கூறினார்.

உடனே அந்த பணம் தமிழரசனின் கூகுள்-பேக்கு வந்ததும் அந்த நபர்களின் வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் அந்த 5 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழரசன் கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/madras-high-court-adjourned-the-asset-case-against-minister-ponmudi/

அதில் காதலர்களை மிரட்டி பணம் பறித்தது தஞ்சை மேலத்தெருவை சேர்ந்த பாபு (24), மணிகண்டன் (27), கீழத்தெரு வல்லரசன் (21), மாதாகோவில் தெரு சார்லஸ் (29), ரெட்டிபாளையம் மெயின் சாலையை சேர்ந்த விக்கி ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதில் பாபு, மணிகண்டன், வல்லரசன், சார்லஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விக்கியை தேடி வருகின்றனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வந்த காதலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Share This Article
Leave a review