சிறைபிடிக்கப்பட்ட 38 தமிழக மீனவர்கள் விடுதலை-மன்னார் நீதிமன்றம்

2 Min Read
iலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும்,அவர்களது படகுகள் சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.இந்த நிலையில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த அக். 14-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற கென்னடி, பாஸ்கர் ஆகியோரது 2 விசைப் படகுகளையும், அதிலிருந்த 15 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

- Advertisement -
Ad imageAd image
மீனவர்கள்

அதேபோல, அக். 28-ம் தேதி ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மெக்கான்ஸ், மரிய சியா, ராமகிருஷ்ணன் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளையும், அதிலிருந்த 23 மீனவர்களையும் அந்நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர்.இந்த 38 மீனவர்கள் மீதும்எல்லை தாண்டுதல், அனுமதியின்றி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. மீண்டும் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 38 மீனவர்களையும் விடுவித்து நீதிபதி சஜீத் உத்தரவிட்டார்.

படகுகள்

மேலும், சிறைபிடிக்கப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளர்கள் வரும் டிச. 13-ம் தேதி உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 38 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேபோன்று கடற்படை ஒரு பக்கம் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது கடற்கொள்ளையர்கள் இலங்கையில் இருந்து தமிழக மீனவர்களை தாக்குவதும் அவர்களுடைய படங்களை சேதப்படுத்துவதும் பிடித்து வைத்திருக்கும் மீன்களை கொள்ளையடிப்பதுமாக தொடர் வேளையில் ஈடுபட்டு வருகின்றார்கள் இது தொடர்பாக இலங்கை அரசு பெரிதாக எதுவும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையேயான உறவுகள் கேள்விக்குறியாவதை யாரும் தடுக்க முடியாது.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தாக்குவதும் அவர்களது படகுகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக இந்திய அரசு அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் ஒரு விரிவான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் அப்போதுதான் மீனவர்களுக்கான பாதுகாப்பு சூழ்நிலை உறுதிப்படுத்த முடியும்.

 

Share This Article
Leave a review