தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள் டாடா கேபிட்டல் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி உள்ளனர். தங்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற தகுதி உள்ளது ஆன்லைன் வாயிலாக உங்கள் வங்கி கணக்கு எண்ணுக்கு பணம் போடுவோம் என கூறி. அவரது ஆதார் கார்டு. பேன் கார்டு, போட்டோ, வங்கி பரிவர்த்தனை போன்ற விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளனர். தொடர்ந்து சுரேஷ் வாட்சப் எண்ணுக்கு ஒரு form அனுப்பி உள்ளனர்.
உங்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும். அப்போதுதான் லோன் கிடைக்கும் என கூறி உள்ளனர். மேலும் verification க்காக சில விவரங்கள் தேவைப்படுகிறது. கேட்கும் விவரத்தை கூறுங்கள் என கூறி ஏடிஎம் கார்டின் 16 இலக்க எண். ஏடிஎம் கார்டு முடிவு பெறும் தேதி, ஏடிஎம் கார்டு சிவிவி எண் உள்ளிட்ட விவரங்களை இரண்டு முறை சுரேஷ் செல்போன் எண்ணுக்கு வந்த otp எண்ணையும் கேட்டுப் பெற்றுள்ளனர். பின்னர் வங்கி கணக்கில் இருந்து 24955 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி யைப் பார்த்த சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதால் கோபம் அடைந்த சுரேஷ் தன்னிடம் பேசியவர் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அடுத்த நிமிடம் அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டு உள்ளோம் என்பதை உணர்ந்த சுரேஷ் உடனடியாக தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். பின்னர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்தார். இதனை அடுத்து சைபர் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சுரேஷிடம் பேசிய செல்போன் எண்களை வைத்து கண்காணித்ததில் குற்றவாளிகள் அரக்கோணத்தில் தங்கி இருப்பது தெரிந்தது.
இதனை அடுத்து தனிப்படையினர் அரக்கோணம் சென்று சைபர் குற்றவாளிகளான நாகப்பட்டினத்தை சேர்ந்த கார்த்தீசன் (34) வியாசர்பாடியை சேர்ந்த சுரேஷ் (34) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 செல்போன்கள், 37 செல்போன் சார்ஜர்கள் 19 சிம்கார்டுகள் மற்றும் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து தஞ்சை அழைத்து வரப்பட்டனர். சைபர் குற்றவாளிகள் இரண்டு பேரும் தஞ்சை. கோவை. கடலூர். திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 31 பேர்களிடம் பல லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் மோசடி செய்து உள்ளதாகவும்,. கொலை. பணமோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இவர்கள் மீது உள்ளது என சைபர் க்ரைம் காவல்துறையினர் தெரிவித்தனர்.