பாட்டாளி மக்கள் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை சென்னையில் இன்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
சில அம்சங்கள்:
தனிநபர் வரி விலக்கு ரூ.10 லட்சம் ஆக உயர்த்தப்படும்
மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ரூ.3000ஆக உயர்த்தப்படும்.
ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி 10% ஆண்டுக்கு வழங்க வலியுறுத்தப்படும்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்.

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 6000-லிருந்து ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். ஒவ்வொரு உழவருக்கும் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள 3 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். அதே போல் இந்தியா முழுவதும் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
Leave a Reply
You must be logged in to post a comment.