- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 30 செ.மீ மழை பெய்துள்ளது. சோழவரத்தில் நேற்று ஒரே நாளில் 30 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் கத்திப்பாக்கத்தில் 25 செ.மீ மழை பெய்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பரிலும் இதுபோன்று ஒரே நாளில் 30 செ.மீட்டர் மழை பெய்திருக்கிறது. மிக்ஜாம் புயலின் போது ஒரே நாளில் 30 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவக்கமே அதிரடி காட்டியிருக்கிறது. கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதலே பலத்த மழை பெய்து வந்தது. நேற்று பகல் நேரங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும் வீடுகளிலும் தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
சென்னை கொளத்தூர், சென்னை ஓஎம்ஆர் சாலை, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களாக மழை பெய்ததால் அங்கு தண்ணீர் தேங்கியது. ஓஎம்ஆர் சாலையில் நேற்று தொடர்ந்து பெய்த மழையால் 2 அடி வரை தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் எவ்வளவு மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செமீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்ததாக செங்குன்றத்தில் 28 செ.மீட்டரும், ஆவடியில் 25 செ.மீட்டர் மழையும், தாமரைப்பாக்கம் மற்றும் பொன்னேரியில் தலா 16 செமீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கத்திப்பாக்கத்தில் 25 செ.மீட்டரும், மணலி புதுநகர் – 24.5 செ.மீ, பெரம்பூர் – 22.4 செ.மீ, கொளத்தூர் – 22.4 செ.மீ மழை பெய்துள்ளது.
ஒரு மாதத்தில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இவ்வாறு மழை பெய்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஆண்டு டிசம்பரிலும் இதுபோன்று ஒரே நாளில் 30 செ.மீட்டர் மழை பெய்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் 30 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/5-packets-per-person-avin-milk-company-has-overcome-the-shortage-of-milk-by-assault/
மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் ஒரே நாளில் 34 செ.மீட்டர் மழை பெய்தது. அதேபோல, ஆவடி (திருவள்ளூர் மாவட்டம்) 28 செ.மீட்டரும், காட்டுக்குப்பம் (காஞ்சிபுரம் மாவட்டம்) 27 செ.மீட்டரும், தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) தலா 24 வரைக்கும் மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் பெய்த மழை அளவுக்கு இந்த ஆண்டு பருவமழையின் துவக்கத்திலேயே பெய்து உள்ளது.