ஆவடியில் கொடூரம் , பெற்றோர் கண்முன்னே மூன்று வயது குழந்தை கால்வாயில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த ஆலத்தூர் சைதன்யா நகர் பகுதியை சேர்ந்தவர். அருள் பாண்டி(26).இவர் சரக்கு வாகனத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவருக்கு கவிதா (26) என்கின்ற மனைவியும் பிரனாவ்(3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.இந்த நிலையில் ஆலத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் மனைவி குழந்தையோடு குளிக்க சென்றுள்ளனர்.
அங்கு முதலில் குழந்தை பிரனாவை குளிப்பாட்டி கரையோரம் அமர வைத்துவிட்டு இருவரும் குளிக்க சென்றுள்ளனர். பின்னர் மனைவிக்கு நீச்சல் தெரியாததால் அருகில் இருந்து அருள் பாண்டி நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கரையில் அமர வைத்த குழந்தை கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துக் கொண்டு சென்றுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை காப்பாற்றி கரையோரம் கொண்டு வந்தனர்.பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த முத்தா புதுப்பேட்டை போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.