கும்மிடிப்பூண்டி அருகே 3 லாரிகள் ஒன்றன்பின் ஒன்று மோதி …

2 Min Read
  • கும்மிடிப்பூண்டி அருகே 3 லாரிகள் ஒன்றன்பின் ஒன்று மோதி கோர விபத்து.பூந்தமல்லி நசரத்பேட்டையை சேர்ந்த ஈச்சர்லாரி ஓட்டுநர் நாகராஜ் (52) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் சேர்ந்த மற்றொரு சரக்குலாரி ஓட்டுநர் லட்சுமணன் (56) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரியில் சிக்கிக் கொண்ட லக்ஷ்மணனை தீயணைப்புத் துறையினர் லாபகமாக மீட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

ராட்சத கிரேன் மூலம் உயிரிழந்த நாகராஜன் உடலை மீட்கும் பணிகள் தீவிரம்.கும்மிடிப்பூண்டி அருகே மூன்று லாரிகள் ஒன்றன்பின் ஒன்று மோதியதில் லாரி ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.மற்றொரு லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பைபாஸ் சாலையில் சென்னை அம்பத்தூரில் இருந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி செல்லும் ஈச்சர் லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஈச்சர் லாரி ஓட்டுநர் பூந்தமல்லி நசரத்பட்டியை சேர்ந்த நாகராஜ் (52) என்பவர் இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

டீச்சர் லாரியின் முன்னே சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஓட்டுநர் ஆந்திர மாநிலம் வைசாத்தைச் சார்ந்த லட்சுமணன் (56) என்பவர் இவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனத்தின் மோதியதில் ஓட்டுனர் லட்சுமணன் அவரது லாரியின் இடுக்கில் சிக்கி தவித்தார்.

தகவல் அறிந்து வந்த சிப்காட் மற்றும் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் லாரியின் இரும்பு சட்டங்களை இரும்பு அறுப்பான் மூலம் அறுத்து சுமார் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாகமிட்டனர்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/madras-high-court-refuses-to-ban-doctors-and-hospitals-from-advertising-in-media/

ஓட்டுனர் லட்சுமணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த மற்றொரு லாரி ஓட்டுநர் நாகராஜின் உடலை மீட்கும் பணியில் சிப்காட் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு இரண்டு லாரிகளையும் தனித்தனியாக பிரித்து உயிரிழந்த நாகராஜன் உடலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சிப்காட் போலீசார் சீரமைத்து வருகின்றனர்.

Share This Article
Leave a review