சென்னையில் நில மோசடி வழக்கில் பாஜக பிரமுகர் மிளகாய்பொடி வெங்கடேசன் உட்பட 3 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் அதிரடி கைது துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

2 Min Read
மிளகாய்பொடி வெங்கடேசன்

ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செம்மரம் கடத்தியதாக 53 வழக்குகளில் தொடர்புடைய பாஜக முக்கிய பிரமுகர் வெங்கடேசன் என்னும் மிளகாய்பொடி வெங்கடேசன் மற்றும் திருவள்ளூர் பாஜக மாவட்ட செயலாளர் நரேஷ் உட்பட 3 பேரை தொழிலதிபருக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சுல்தான்(52). தொழிலதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் இறுதியில் புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரில், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட பாடியநல்லூர் பகுதியில் 23.5 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2017ம் ஆண்டு 10 பேர் நிலத்தை விற்பனை செய்து கொடுக்கும்படி நிலத்திற்கான பவர் கொடுத்தனர். அதன்படி நான் இந்த இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறேன். இதற்கிடையே நிலத்தை விற்பனை செய்ய முயன்ற போது, அந்த இடம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் வெங்கடேசன் அவரது ஆதரவாளரான திருவள்ளூர் ஆர்.ஜி.என், காலனி பகுதியை சேர்ந்த பாஜக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நரேஷ், மற்றும் நரேஷின் தந்தை பிரதீப் குமார் ஆகியோர் பெயரில் இருப்பது தெரியவந்தது. எனவே ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை இந்த மோசடி நபர்களிடம் இருந்து மீட்டுதர வேண்டும் என்று புகார் அளித்தார்.

அந்த புகாரின் மீது ஆவடி கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நிலம் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், பாஜக பிரமுகரான கே.ஆர்.வெங்கடேசன் தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது ஆதரவாளரான பாஜக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நரேஷ் மற்றும் அவரது தந்தை பெயரில் மோசடியாக ஆவணங்கள் உருவாக்கி அபகரித்தது தெரியவந்தது. மேலும், பாஜக பிரமுகர் கே.ஆர்.வெங்கடேசன் என்னும் மிளகாய்பொடி வெங்கடேசன் பிரபல செம்மரம் கடத்தல் வியாபாரியாக இருந்து வந்ததும் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி

சில நாட்களுக்கு முன்பு ஆந்திரா காவல்துறை செம்மரம் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை செங்குன்றம் பகுதியில் துப்பாக்கி முனையில் வெங்கடேசனை கைது செய்ததும் தெரியவந்தது.அவரது வீட்டை சோதனை செய்த போலீசாருக்கு பெரிய அதிர்ச்சி வீட்டில் அனுமதி பெறாமல் வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன.அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாஜக பிரமுகரான  மிளகாய்பொடி வெங்கடேசன் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review