கள்ளக்குறிச்சியை சேர்ந்த 3 பேர் பலி. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது பெங்களூரு அருகே பட்டாசு கடை விபத்து.

3 Min Read
பட்டாசு விபத்து

பெங்களூரு அருகே தமிழக- கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவுவாயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேடரப்பள்ளியை சேர்ந்த நவீன் (வயது 43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் குடோன் இருந்தது.இந்த நிலையில் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் சாலையின் இருபுறமும் ஏராளமான பட்டாசு கடைகள், குடோன்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை காலங்களில் இங்கு அதிகளவில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். கர்நாடகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து பட்டாசு வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில், அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைகளுக்கு 3 சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் அடங்கிய அட்டை பெட்டிகள் நேற்று வந்து இறங்கின.

அப்போது பட்டாசு பெட்டிகளை இறக்கும்போது திடீரென பட்டாசுகள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்து தொடர்பாக கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு கடை வெடிவிபத்து குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்படுள்ளது.

பட்டாசு வெடி விபத்து

விபத்தில் இறந்தவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா டி.அம்மாபேட்டையை சேர்ந்த ராமு மகன் பிரகாஷ் (20), முருகன் மகன் வேட்டப்பன் (25), பெரியசாமி மகன் ஆதிகேசவன் (23), தம்பிதுரை மகன் விஜயராகவன் (20), செந்தில் மகன் இளம்பருதி (19), மாது மகன் ஆகாஷ் (23), வேடியப்பன் மகவேடியப்பன் மகன் கிரி (22), மற்றொரு வேடியப்பன் மகன் சச்சின் என்ற முனிவேல் (22). திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை குமாரபகுதியை குமார் என்ற ஏசு என்பவரின் மகன் சந்தோஷ் (24), மேகநாதன் மகன் நித்தீஷ் (26), கள்ளக்குறிச்சி அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் மகன் பிரபாகரன் என்கிற டோனி (19), ஜெய்சங்கர் மகன் அப்பாஸ் (23), பரிகம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வசந்தராஜ்(27), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த மரியா லாரன்ஸ் மகன் அந்தோணி பவுல்ராஜ் என்பது தெரியவந்தது.

பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகா முதல்வர்

இந்த நிலையில் இன்று விபத்து நடந்த இடத்தை கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி கே சிவகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையா, இந்த வெடி விபத்து துரதிஷ்டவசமானது. தமிழகத்தை சேர்ந்த 14 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு கர்நாடக மாநில அரசு சார்பில் தலா 5 லட்ச ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டாசு கடையில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருந்துள்ளது. இந்த விபத்திற்கு கடை உரிமையாளர்களே முழு பொருப்பு, அவர்களது கவனக்குறைவு மற்றும் பாதுகாப்பு இன்மை காரணமாக விபத்து நடந்துள்ளது

தமிழகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்ததாலும் இந்த விபத்து கர்நாடக மாநிலத்தில் நடந்ததாலும் பாரபட்சம் இன்றி விசாரணை நடத்திட இந்த பட்டாசு கடை வேடி விபத்து வழக்கு விசாரணையை கர்நாடகா மாநில அரசு குற்ற புலனாய்வுத்துறைக்கு criminal investigation department மாற்றம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a review