புதுச்சேரி அருகே லாஸ்பேட்டையில் மது வாங்க சென்ற நபர் மது வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் அந்த மூன்று நபர்கள் திருட்டு மோசடியில் ஈடுபட்டு 4 மோட்டார் வாகனத்தை திருடினார்கள். இந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மூன்று நபர்கள் ஸ்கூட்டரில் வந்து புல்லட் பைக்கை திருடி, டோப் செய்து சென்று செல்லும் சிசிடிவி காட்சி மூலம் போலிசாரிடம் பிடிப்பட்டனர்.

புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை என்ற பகுதியில் தொடர் பைக் திருட்டு முறை அதிகமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சியை போலிசார் ஆய்வு செய்து போது, ஸ்கூட்டரில் வந்து புல்லட் பைக்கை திருடும் இரு நபர்கள், திருடி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த இரு நபர்களை போலீசார் தேடி வந்தனர். கருவடிக்குப்பம் குப்பம் என்ற சிவாஜி சிலை அருகில் பைக்கில் வந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர் நெல்லித்தோப்பு என்ற பகுதியில் பெரியார் நகரை சேர்ந்த ரூத்ரேஷ்மணி வயது (26) என்பதும்,ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும், தெரியவந்தது. மேலும் தனது நண்பர்கள் கரியமாணிக்கம் என்ற நகரை சேர்ந்த அஜித்குமார் வயது (28) என்பதும், வானூர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு என்ற பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரும், ஆகியோருடன் சேர்ந்து 4 பைக்களை திருடி சென்று விற்பனை செய்து உள்ளனர்.

பின்பு குடிப்பழக்கத்திற்கு ஆளான மூவரும் மது வாங்குவதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் பைக் என்னும் திருட்டு மோசடியில் ஈடுப்பட்டு வந்ததாக போலிசாரிடம் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து திருட்டுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரை பறிமுதல் செய்து விசாரித்தனர். இந்த சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.