கனகச்சிதமாக காய்களை நகர்த்தி, தாமரையை சுருங்க வைத்து, ஒரே கல்லில் 3 “மாம்பழங்களை” சுட்டெரித்துள்ளது கருணாநிதியின் உதயசூரியன்..!!
தமிழ்நாட்டின் மற்ற தொகுதிகளை போல ராமநாதபுரத்தை நாம் எடை போட்டுவிட முடியாது.. இந்த தொகுதியில் எப்படியாவது, இந்த முறையாவது ஜெயித்து விட வேண்டும் என்று பாஜக முடிவு செய்துள்ளது. இதற்கு காரணம், 1951 முதல் 2019 வரை ஒருமுறைகூட ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. ஒவ்வொருமுறையும் அதிமுகவுடன் வாதம் புரிந்து,
ராமநாதபுரம் தொகுதியை வாங்கியும் பாஜக தோற்றுவிடுகிறது.. கடந்த முறையும் இப்படித்தான் அதிமுகவிடம் சண்டை போட்டு, இந்த தொகுதியை வாங்கி, திமுகவின் நவாஸ் கனியிடம்தான்
ஒப்படைத்துவிட்டு போனது பாஜக.
தொகுதியில் பாஜக:
இப்போது, ராமநாதபுரம் தொகுதியின் பெயர் அதிகமாக முணுமுணுக்கப்பட்டு வருகிறது. காரணம், இங்கு பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதனாலேயே அண்ணாமலையின் பாதயாத்திரை, திருச்செந்தூரிலிருந்து, ராமநாதபுரத்துக்கு ஷிப்ட் ஆனது. அமித்ஷாவின் வருகையும் உறுதியானது. எடப்பாடி – அண்ணாமலைக்குள், கூட்டணி உரசல் – ஈகோ க்ளேஷ் போன்றவைகள் ஓடிக்கொண்டிருந்தாலும், இந்த பாதயாத்திரையை வெற்றிகரமாக நடத்திமுடித்து, ராமநாதபுரத்தில் பாஜகவின் ஆதரவை பெருக்கி, திமுகவுக்கும் ஒரு “செக்” வைக்க வேண்டும என்பதே fதமிழக பாஜகவின் எண்ணமாக
உள்ளது.திமுக மோப்பம்:
ஆனால், திமுக இந்த விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்டது. இந்த முறை, கூட்டணி கட்சிக்குக்கூட இந்த தொகுதியை தராமல், நேரடியாகவே, களம் காண வேண்டும் என்பதே, உடன்பிறப்புகளின் விருப்பமாக இருந்து வருகிறது.. இங்குள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 4 இடங்களில் திமுக வலுவாகவே உள்ள நிலையில், பாஜகவின் வீழ்ச்சியையும் ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய முனைப்பு காட்டியது திமுக. அண்ணாமலையின் பாதயாத்திரையை அமித்ஷா துவக்கி வைக்கப்போவதாக தகவல் வெளியானதுமே, இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்றும் காய்நகர்த்த துவங்கியது. சென்றமுறை அமித்ஷா வந்தபோது, மின்தடை ஏற்பட்டது. அப்போதுதான் காரில்ஏறி, ஏர்போர்ட் வாசலை அமித்ஷா தாண்டுகிறார், உடனே கரண்ட் கட் ஆனது. பாஜகவினர் மறியல் செய்து, விவகாரத்தை பெரிதாக்கிய நிலையில், இந்த முறை அமித்ஷா வருகையின்போது, எந்த மின்தடையும் வந்துவிடக்கூடாது என்று தமிழக மின்வாரியம் உத்தரவு போட்டது.
ராமநாதபுரம்:
ஆனால், ராமநாதபுர விஷயத்தை முறியடிக்க, ரூட்டை வேறு பக்கம் திமுக திருப்பியது. இதற்காக, ஐடி விங் தரப்பில் டிரெண்டாக்கப்பட்டதுதான், “என் வீடியோ என் ஆடியோ” என்ற சமாச்சாரம். மண்ணில் புதைந்துபோன கே.டி.ராகவன் விவகாரம், காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா, கேசவ விநாயகம் விவகாரம் என மொத்தத்தையும் எடுத்து வந்து, திடீரென ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தது திமுகவின் ஐடி விங். “என் மண், என் மக்கள்” என்று அண்ணாமலையின் முழக்கத்தையும் தாண்டி, திமுகவின் “என் வீடியோ என் ஆடியோ” இணையத்தில் வைரலானது. இதனால், அண்ணாமலையின் ஆடியோ எதிர்பார்த்த அளவுக்கு ட்ரெண்டாகாதது, திமுகவுக்கு பிளஸ்தான்.
மாம்பழம்:
எனினும், திமுகவே எதிர்பார்க்காத அளவுக்கு, கையில் வந்து “மாம்பழமாக” விழுந்தது, பாமகவின் போராட்டம். இதை திமுக கனகச்சிதமாக பயன்படுத்தி கொண்டது என்றே சொல்லலாம்.
திமுக நினைத்திருந்தால் பாமகவின் போராட்டத்தை தடுத்திருக்கலாம். அல்லது அனுமதி தராமல் மறுத்திருக்கலாம். எனினும், திமுக அரசு போராட்டத்துக்கு அனுமதி வழங்கியது.
அத்துடன், 1000 பாமக தொண்டர்கள் ஒன்றுதிரளும்வரை அமைதி காத்தது தமிழக காவல்துறை. அதற்கு பிறகே கைது நடவடிக்கையையும் மேற்கொண்டது. இந்த நேரத்தில், நாம் ஒன்றை சொல்லியாக வேண்டும். ஜஸ்ட் 48 மணி நேரத்தில், போராட்டத்தை அறிவித்ததுடன், ஏகப்பட்ட தொண்டர்களையும் நெய்வேலி பக்கம் திரட்டியதில் பாமகவின் முன்னெடுப்பு அபாரமானது. ஆச்சரியம் தரத்தக்கது, பாராட்டுக்குரியது.ஒரே கல்லில் 3 மாங்காய்:
எனினும், பாமகவின் போராட்டத்தை முன்வைத்தே, அண்ணாமலை யாத்திரை + அமித்ஷாவின் வருகையின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது திமுக அரசு. காரணம் நேற்றெல்லாம், அமித்ஷா விவகாரத்தைவிட, நெய்வேலி போராட்டம் பேசப்பட்டது.
அண்ணாமலையைவிட, அன்புமணியின் பேச்சு கவனிக்கப்பட்டது. ஆக, அண்ணாமலை ஆடியோ + பாதயாத்திரை + அமித்ஷா விவகாரம் என அனைத்தையுமே பாமகவை வைத்தே டம்மியாக்கி,
ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்துள்ளது மு.க. ஸ்டாலினின் அரசு.!