கோவை அருகே தனியார் நிறுவனத்தின் ராட்சத விளம்பர பேனர் அமைக்கப்படுவது வழக்கம் அப்படி பேனர் பொருத்தும் போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேனர் அமைக்கும் தொழிலாளர்கள் விபத்துள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ராமசாமி என்பவரது இடத்தில் ராட்சத பேனர்கள் வைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியை சேலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் எடுத்து செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் பணியினை சேலத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.

பணியின் போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் குமார், குணசேகரன், சேகர் என்ற 3 தொழிலாளர்கள் சாரத்தின் அடியே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் பேனர்களை அகற்றி உயிரிழந்த குணசேகர், செந்தில் முருகன், குமார் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கருமத்தம்பட்டி போலீசார் தலைமறைவாக உள்ள காண்ட்ராக்டர் பழனிசாமியை தேடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக உயரத்தில் பேனர்கள் அமைக்கப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவித்தனர்.அது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.