விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இரண்டு சக்கர வாகனம் கார் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் பலி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது என்பவர் தனது குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பின்னர் புதுச்சேரி கிருஷ்ணகிரி சாலை வழியாக கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டிருந்த பொழுது செஞ்சி அடுத்துள்ள நங்கிலிகொண்டான் என்ற இடத்தில் இவரது கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த சேர்விளாகம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி வேலை செய்யும் தந்தை ஆறுமுகம், அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மொடையூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி காவல்துறையினர் உயிரிழந்த 3 உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கார் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை மகன் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது சம்பந்தமாக செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து நடந்தது சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர்.