கடலூர் மாவட்டம் வடலூர் அருகே விபத்தில் 3 பலி30 பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி

0
77
விபத்துக்குள்ளான பேருந்து

கடலூரில் இருந்து  தனியார் பேருந்து பயணிகளுடன் விருதாச்சலம் நோக்கிச் சென்றது குறிஞ்சிப்பாடி அருகே செல்லும் பொழுது பேருந்து முன் பக்கமாக சென்ற வாகனத்தை முந்தி செல்லும்போது வடலூரில் இருந்து கடலூர் நோக்கி வந்த கார் மீது மோதியது நிலை தடுமாறிய பேருந்து கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தினால் காரில் பயணித்த 5 பேரில் 4 பேர் படுகாயம் அடைந்து ஒருவர் உயிர்யிழப்பு ஏற்பட்டது.

பின்னர் தனியார் பேருந்து தரதரவென சென்ற நிலையில் எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.  இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த ஒருவரும் இரு சக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலேயே பலியாக நிலையில் தனியார் பேருந்தில் பயணித்தவர்களும் காரில் பயணித்தவர்களும் என முப்பதுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here