வெயிலின் தாக்கம் அதிகமாகவே இந்தியாவின் பல பகுதிகளில் வனவிலங்குகள் வளங்களை விட்டு வெளியே வருவது வாடிக்கையாகிவிட்டது குறிப்பாக தமிழகம் கேரளா ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து உணவு நீர் தேடி அலைந்து வருகிற சம்பவம் நிகழ்ந்து வருவதை நாம் அறிவோம்.
அந்த வகையில் தற்போது ஆந்திராவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஆந்திர மாநிலம் ஜகர்மலா பகுதியில் லாரி மோதி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் – பலமனேரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு குட்டிகள் உட்பட 3 யானைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனங்களில் போதிய உணவு தண்ணீர் இருக்குமேயானால் இப்படி வனவிலங்குகள் சாலையை கடக்க வேண்டிய அவசியம் இருக்காது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.