- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டிற்கு எதிரான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானுக்கு எதிரான மற்றொரு பதிலடி தாக்குதலை நடத்த இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலில் சிசேரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தனிப்பட்ட இல்லத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதற்கு பதிலடியாக இந்த இரண்டாம் கட்ட தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில் பதிலடி தாக்குதலை நடத்த இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பங்கருக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் 2-3 இஸ்ரேலின் டாப் தலைவர்கள் பங்கரில் பதுங்கி இருந்துள்ளனர். பங்கரில் இருந்தபடியே இவர்கள் தாக்குதலை கண்காணித்துள்ளனர்.
பொதுவாக இது போன்ற பெரிய தாக்குதல் சமயங்களில் தலைவர்கள் பங்கருக்குள் செல்வது வழக்கம். அப்படிதான் பெஞ்சமின் நெதன்யாகு பங்கருக்குள் சென்று இருந்தார். அதோடு ஈரான் உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தலாம்.. வானத்தில் விமானங்களை அனுப்பி டாக் பைட் நடத்தி இருக்கலாம்.. விமானங்கள் இஸ்ரேல் எல்லைக்குள் வரவும் வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்கப்பட்டது. இதற்கு அடுத்து பாதுகாப்பு கருதி.. பெஞ்சமின் நெதன்யாகு பங்கருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/young-womans-throat-was-cut-and-killed/
குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் வெளியிட்ட ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க அணு மற்றும் எண்ணெய் மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி உள்ளது.