சென்னை விமான நிலையத்தில் பையில் மறைத்து வைத்து வனவிலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் உளவுத்துறையின் தகவலின் படி, 28.04.2023 அன்று ஏர் ஏசியா விமானத்தில் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த பெண்மணியை சோதனை செய்ததில் தனது பையில் 22 அரியவகை பாம்புகள் மற்றும் ஒரு பச்சோந்தி உற்பட ,23 வனவிலங்குகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அவற்றை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதேபோல் 28.04.2023 அன்று ஏர் ஏசியா விமானம் மூலம் கோலாம்பூரில் இருந்து வந்த பயணி ஒருவரை சோதனை செய்த போது 177 கிராம் எடையுள்ள 20 மஞ்சள் நிற உலோகத் தகடுகள் மற்றும் 88 கிராம் எடையுள்ள தங்கம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இத்தனையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மொத்தம், 23 எண்ணிக்கையிலான வனவிலங்குகள், 177 கிராம் எடையுள்ள 20 மஞ்சள் நிற உலோகத் தகடுகள் மற்றும் 88 கிராம் எடையுள்ள இரண்டு தங்கம் சுங்கச் சட்டம், 1962ன் கீழ் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.