22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..!

2 Min Read

இலங்கை கடற்படையால் கைது செய்து விடுவிக்கப்பட்ட 22 மீனவர்கள் 2 படகுகளில் பாம்பன் வந்தனர்.

- Advertisement -
Ad imageAd image

நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரையில் இருந்து கடந்த 15ஆம் தேதி 2 நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்க சென்ற 22 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்து ரோந்து பணியில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி பிடித்ததாக கூறி 22 மீனவர்களையும் கைது செய்து, பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு பாம்பனை சேர்ந்தது என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாம்பனை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன் தலைமையிலான மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினர்கள் சந்தித்து 22 மீனவர்கள் மற்றும் படகையும் மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். அப்போது நிர்மலா சீதாராமன் உடனடியாக இது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் கொழும்பில் உள்ள இந்திய தூதராக அதிகாரிடமும் தொடர்பு கொண்டு பேசினார்.

இலங்கை கடற்படையால் கைது செய்து விடுவிக்கப்பட்ட 22 மீனவர்கள் 2 படகுகளில் பாம்பன் வந்தனர்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எடுத்த உடனடி நடவடிக்கையை தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பனை சேர்ந்த 22 மீனவர்களும் படகுடன் இரவே விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலையில் கோடியக்கரை அருகே உள்ள இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து 2 படகுகளுடன் 22 மீனவர்களும் நேற்று பகல் 1 மணி அளவில் பாம்பன் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

22 மீனவர்கள் 2 படகுகளில் பாம்பன் வந்தனர்.

இந்த மீனவர்களை ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தரணி முருகேசன், நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன், அலெக்ஸ் மற்றும் மீனவ குடும்பத்தினர் வரவேற்றனர். இது குறித்து மீனவர் அருள் பாஸ்கர் கூறியதாவது; கோடியக்கரை அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் திடீரென இரவு 10 மணிக்கு எங்களை விடுவிப்பதாக கூறி படகுடன் அனுப்பி வைத்தனர். இந்திய கடல் எல்லை வரை வந்து இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி சென்று விட்டனர்.

மேலும் மீண்டும் இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடிக்க வரக்கூடாது என எச்சிரித்து அனுப்பினர். படகுடன் எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்கள்.

Share This Article
Leave a review