உல்லாசப் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

2 Min Read
மீட்புப் பணி

மீட்புப் பணி

- Advertisement -
Ad imageAd image

மலப்புறம் பரப்பனங்காடி பிரசுடுங்கல் கடற்கரையில் உல்லாசப் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்திய தகவல்களின்படி, 21 இறப்புகள் உறுதி செய்யப் பட்டுள்ளன. 5 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி உறுதி செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகிறது.படகில் மேலும் பலர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது . படகில் 30 க்கும் மேற்பட்டோர் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சதுப்பு நிலப்பகுதியில் படகு கவிழ்ந்தது என்பது தெளிவாகிறது. இரட்டை அடுக்கு படகு கவிழ்ந்தது. விபத்துக்குள்ளான படகை வெட்டி மக்கள் வெளியே கொண்டு வந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளுக்காக மலப்புறம் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் இருந்து கூடுதல் தீயணைப்புப் படையினர் வந்துள்ளனர். தானூர் அருகே ஒட்டும்பிரம் தூவல் திரம் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. படகில் அதிகளவில்  பயணிகள்  இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இங்கு படகு சேவை ஆறு மணிக்கு முடிவடைய வேண்டும். ஆனால் அதன் பின்னரே விபத்து நடந்துள்ளது.

மலப்புறம் மாவட்டம் தனுர் ஒட்டும்புரத்தில் உள்ள தூவல் திரம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கிய சம்பவத்தில் அவசர மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. தனூர், திரூர் தீயணைப்புத் துறையினர், காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத் துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள் பிஏ முஹம்மது ரியாஸ் மற்றும் வி அப்துர் ரஹ்மான் ஆகியோர் மீட்புப் பணியை ஒருங்கிணைப்பார்கள் என்றும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை

மலப்புறம் படகு விபத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்ய அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

மலப்புரம் தானூரில் படகு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிபுணத்துவ சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு போதிய ஏற்பாடுகளை செய்யவும் சுகாதாரத்துறை இயக்குனருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவர்கள் சிகிச்சை  அளித்து வருகின்றனர்.

பிரமர் மோடி உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணத்தொகை  அறிவித்துள்ளார். நாளை காலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு,  பாடுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

Share This Article
Leave a review